இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த தனியார் பேருந்தில் சுமார் 50 பயணிகள் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.




