Instagram Kids செயலியில் சேரச் சிறுவர்களுக்குப் பெற்றோரின் அனுமதி தேவை.
அதில் விளம்பரங்கள் இடம்பெறமாட்டா என்றும் சிறுவர்களின் வயதுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும் என்றும் கூறப்பட்டது.
எனினும் அதில் உள்ள பாதுகாப்பு அக்கறைகளைக் கருதி, செயலியை வெளியிடுவதைக் கைவிடுமாறு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் நல அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும், Instagram Kids செயலியை உருவாக்குவது சரியான முடிவுதான் என்று Instagram தொடர்ந்து கூறிவருகிறது.
அதன் உருவாக்கத்தைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ள வேளையில், பெற்றோர் மேற்பார்வையிடும் அம்சங்களை மேம்படுத்தும் பணியில் Instagram ஈடுபட்டு வருகிறது.




