மன்னாரில் கடலில் மிதந்து வந்த 68 மில்லியன் ரூபாய்!

Date:

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம்-நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 68 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை நேற்று செவ்வாய்க்கிழமை (21) மாலை வங்காலை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

வங்காலை கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) மாலை அச்சங்குளம்-நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகுதி கஞ்சா பொதிகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இதன் போது சுமார் 228 கிலோ எடை கொண்ட கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதோடு, இதன் பெறுமதி 68 மில்லியன் ரூபாய் என தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

மேலதிக நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...

பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ்காரர் பணியிடைநீக்கம்

வத்துப்பிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் சாவடியில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் ஒருவர்,...

கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்