ஆலய அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு!

Date:

அரசாங்கத்தின் கொள்கை சட்டமான “சுபீட்சத்தின் நோக்கு” திட்டத்தின்கீழ் பிரதமரும் மற்றும் மதவிவகார அலுவல்கள் கலாசார அமைச்சருமாகிய மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களது வழிகாட்டுதலின்கீழ் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அம்பாரை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட காரைதீவு, சம்மாந்துறை, நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட ஆலயங்களின் அபிவிருத்திக்கான கொடுப்பனவு காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

காரைதீவு பிரதேச செயலாளர் சி.ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் கலந்துகொண்டதுடன், அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, காரைதீவு உதவி பிரதேச செயலாளர், மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்துகொண்டு காசோலையை வழங்கி வைத்தனர்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்...

நெல்லியடி பொதுச்சந்தை மலசலகூடங்களில் சுகாதார சீர்கேடு

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி மரக்கறி சந்தையில் காணப்படும் மலசல கூடங்கள் சுகாதார...

ஆயுதப்பற்றாக்குறையால் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை இடைநிறுத்த முடிவு: ட்ரம்ப்பிற்கு ஏற்பட்ட அவல நிலை!

தொடர்ச்சியாக 13 நாட்கள் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் மீதான தாக்குதல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்