வவுனியா நகரசபை உறுப்பினர் கொரோனா தொற்றினால் மரணம்!

Date:

வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவர் கோவிட் தொற்று காரணமாக இன்று (20) மரணமடைந்துள்ளார்.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வவுனியா நகரசபைக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்டிருந்த தேக்கவத்தையில் வசித்து வரும் த.புஞ்சிகுமாரி என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையின் கோவிட் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி இன்று மாலை மரணமடைந்துள்ளார்.

இவர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய போதும் இன, மத பேதங்களுக்கு அப்பால் ஆளுக் கட்சி உறுப்பினராக செயற்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நெஞ்சில் கையடக்க தொலைபேசி வைத்து உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு

கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து...

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்