பிரிட்டிஷ் குத்துச்சண்டை வீரர் அமீர் கான் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
கானின் நண்பர் ஒழுங்காக முகக்கவசம் அணியாதது குறித்து ஒருவர் புகார் அளித்திருந்தார். அதன் தொடர்பில் கானும் அவருடைய நண்பரும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகத் தெரிகிறது.
Newark விமான நிலையத்திலிருந்து Dallas-Fort Worth செல்லும் விமானம் மீண்டும் விமான நிலைய நுழைவாயிலுக்குத் திருப்பப்பட்டது.
கானும் அவருடைய நண்பரும் விமானச் சிப்பந்திகளின் விதிகளுக்கு இணங்க மறுத்ததால், அவர்கள் காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
ஆனால், அதில் காவலர்கள் தலையிடவில்லை என்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் கூறியது.




