தபால் நிலையங்கள் புதன், வியாழனில் மூடப்படும்!

Date:

தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே திறந்திருக்கும்.

இது தொடர்பில் தபால்மா அதிபர் வௌியிட்டுள்ள அறிக்கையில்-

தாபால் சேவையை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், வாரத்தில் ஆறு நாட்களுக்கு பணி நிமித்தம் அலுவலகங்களை திறக்க கடந்த தினம் தீர்மானிக்கப்பட்டது.

இருப்பினும், கடுமையான போக்குவரத்து சிரமங்கள் இருப்பதால், அந்த நிலையை பராமரித்துச் செல்ல கடுமையான தடைகள் ஏற்பட்டுள்ளன.

அதன்படி, தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகளின் உடன்பாட்டுடன், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இரண்டு நாட்களுக்கு அலுவலகங்களை மூடவும், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே தபால் சேவைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காலப்பகுதியில், ​​சுமார் 500 ஊழியர்கள் கொரோனவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் விளைவாக சுமார் 50 அலுவலகங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

முதியோர் கொடுப்பனவுகள் உள்ளிட்ட கொடுப்பனவுகள் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் வழங்கப்படும்.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் – மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,...

அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்...

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்