கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் யாராவது மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் நிபுணர் வைத்தியர் சஜீவன அமரசிங்க, மனநல கவலை உள்ளவர்கள் 1926 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.
சீனாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 1500 பேர் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். அவர்கள் ஆறு மாதங்களின் முடிவில் மற்றும் ஒரு வருடத்திற்கு ஒரு முறை மதிப்பீடு செய்யப்பட்டனர். அவர்களில் 25% பேர் மனச்சோர்வு மற்றும் பிற மனநலக் கவலைகளால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது தெரிய வந்ததாக அவர் தெரிவித்தார்.




