29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

மாணவர்களிற்கு தடுப்பூசி செலுத்தும் போது முன்னுரிமையளிக்கப்பட வேண்டியவர்கள்!

இயல்பான நோய்கள் உள்ள மாணவர்கள் மற்றும் சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைக்கு தொற்றும் மாணவர்கள், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் போது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறுகிறது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் நலிந்த ஹேரத் ஊடக சந்திப்பில் பேசுகையில், சிறப்பு மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் மருத்துவமனை மூலம் பாடசாலை மாணவர்களிற்கு தடுப்பூசி போட வேண்டும் என்றார்.

தடுப்பூசி செலுத்தப்படும் போது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவர்கள் குறித்த முன்மொழிவுகளை தொழில்நுட்ப குழுக்களுக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பலமுறை சமர்ப்பித்துள்ளதாக வைத்தியர் ஹேரத் கூறினார்.

பாடசாலைகளில் 90% க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் தற்போது வரை முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகள் நடத்துபவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகன சாரதிகளிற்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று  கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஞானசாரர் வைத்தியசாலையில்

Pagetamil

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

Leave a Comment