பிரிட்னி ஸ்பியர்ஸ் விரைவில் 3வது திருமணம்!

Date:

அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல பொப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் (39) நீண்டநாள் காலரை நிச்சயதார்த்தம் செய்துள்ளார். விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளார். ஸ்பியர்ஜிற்கு இது 3வது திருமணம்.

ஸ்பியர்ஸ் கடந்த 2004ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது நீண்ட கால நண்பரான ஜேசன் ஆலன் அலெக்சாண்டரை திருமணம் செய்தார். எனினும், இந்த திருமணம் செல்லாது என அடுத்த 55 மணி நேரத்தில் நீதிமன்றம் அறிவித்தது. தனது செயல் குறித்த புரிதல் பிரிட்னி ஸ்பியர்சுக்கு இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

எனினும் அடுத்த சில மாதங்களிலேயே கெவின் பெடர்லைன் என்பவரை அவர் மணந்தார். ஆனால் இந்த திருமண வாழ்க்கையும் நீண்ட காலம் நீடிக்கவில்லை. 2007ஆம் ஆண்டு இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்தனர்.

இதைத்தொடர்ந்து 2008ஆம் ஆண்டு முதல் பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது தந்தை ஜேமி ஸ்பியர்ஸ் கட்டுப்பாட்டில் இருந்து வந்தார். இதனால் தனது பொருளாதாரம் சார்ந்த, வாழ்க்கை சார்ந்த எந்த ஒரு முடிவையும் எடுக்கும் உரிமை பிரிட்டனி ஸ்பியர்சுக்கு மறுக்கப்பட்டது. குறிப்பாக தனது நீண்டகால காதலரான நடிகரும், உடற்பயிற்சி பயிற்சியாளருமான சாம் அஸ்காரியை (27) திருமணம் செய்து கொள்ள அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

எனவே தனது தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேற நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை நீண்ட காலமாக நடந்து வந்த நிலையில் பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது தந்தையின் பாதுகாப்பில் இருந்து வெளியேற அனுமதி வழங்கி நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் பிரிட்னி ஸ்பியர்ஸ் தனக்கும் தனது நீண்டகால காதலர் சாம் அஸ்காரிக்கும் நிச்சயதார்த்தம் முடிந்ததாக தற்போது அறிவித்துள்ளார். இது தொடர்பாக காதலர்கள் இருவரும் நிச்சயதார்த்த மோதிரத்துடன் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். எனினும் திருமணம் எங்கு, எப்போது நடைபெறும் என்பதை அவர்கள் அறிவிக்கவில்லை.

spot_imgspot_img

More like this
Related

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

மட்க்களப்பு கிரான்குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி...

மட்டக்களப்பில் மீனவர் நலன் கருதி அபிவிருத்தி குழு கூட்டத்தில் எம்.பி மார் பேசுவதில்லை என ஈ.பி.டி.பி.கட்சி அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு நகரை அண்டிய பகுதிகள் மற்றும் கரையோர பிரதேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும்...

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர் எடுக்க வெட்டிய பாதுகாப்பற்ற குழியில் 6 வயதுடைய சிறுவன் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு

மட்டக்களப்பு நெடியமடு பகுதியில் நீர்ப்பாசன திணைக்களம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்