கைது செய்யப்பட்ட பொப் மார்லி உள்ளிட்ட 3 பேரையும் இம் மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொப் மார்லி என்று அழைக்கப்படும் சமிந்த தப்ரு, அவரது மனைவி சுஜனி குமாரி விக்கிரமரத்ன மற்றும் சுசில் குமார ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பேருளையில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயின் கடத்தலுடன் தொடர்புடையர் என்ற சந்தேகத்திலேயே பொப் மார்லி கைதானார்.
அவரிடமிருந்து 100 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாரால் தேடப்படுவதை அறிந்த பொப் மார்லி, தனது நீண்ட தலைமுடியை கத்தரித்து விட்டு, மனைவியுடன் பதுங்கியிருந்த போது நேற்று கைது செய்யப்பட்டார்.



