நினைவிழந்த நிலையிலேயே 39 ஆண்டுகள் இருந்த பிரான்ஸ் முன்னாள் கால்பந்து வீரர் ஜீன் பியர் ஆடம்ஸ் (Jean Pierre Adams) நேற்று முன்தினம் (6) காலமானார்.
73 வயதான அவரது மரணத்தை, அவரது முன்னாள் அணியான பிரான்ஸின் பாரிஸ் சென்.ஜெர்மைன் அணி உறுதிப்படுத்தியது.
1982ஆம் ஆண்டு முழங்கால் அறுவைச் சிகிச்சைக்காக 32 வயது ஆடம்ஸுக்கு மயக்க மருந்து கொடுக்கும்போது அதில் தவறு நேர்ந்தது. அதனால், ஆடம்ஸின் மூளையில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு அவர், நினைவிழந்தார்.
நினைவிழந்த நாள்முதல் ஆடம்ஸை, அவரது அன்புமனைவி பராமரித்து வந்தார்.
அப்போது ஆடம்ஸ் பிரான்சில் ஒரு வெற்றிகரமான விளையாட்டு வாழ்க்கையை அனுபவித்தார். நைஸ் மற்றும் பாரிஸ் சென்-ஜெர்மைன் மற்றும் பிரெஞ்சு தேசிய அணிக்காக ஆடி வந்தார்.
அவரது கால்ப்பந்து ஆர்வத்தால்- ஐரோப்பா அணிகளில் விளையாட விரும்பியதால்- அவருக்கு 10 வயதான போது அவரது குடும்பம் செனகலை விட்டு பிரான்ஸிற்கு சென்றது.
ஒரு பயிற்சி பயிற்சி முகாமில் முழங்கால் காயம் ஏற்பட்டது. அவருக்கு தசைநார் அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. அவர் மருத்துவமனையில் தங்கியிருந்த காலத்தில் நடந்த தவறுகளால் ஆடம்ஸ் தனது வாழ்நாளில் பாதிக்கும் மேல் கோமா நிலையில் இருக்க வேண்டியிருந்தது.
ஆடம்ஸின் அறுவை சிகிச்சை நாளில் லியோன் மருத்துவமனை ஊழியர்கள் பலர் வேலைநிறுத்தத்தில் இருந்தனர்.
அவரின் மனைவி பெர்னாடெட் அறுவை சிகிச்சையை தள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார், ஆனால் ஒரு மயக்க மருந்து நிபுணரின் மேற்பார்வையில் ஒரு பயிற்சியாளர் எட்டு நோயாளிகளிற்கு மயக்க மருந்து செலுத்தியதால், தவறுகள் செய்யப்பட்டன.
பயிற்சியாளர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மயக்க மருந்து நிபுணர் மற்றும் பயிற்சியாளர் இருவருக்கும் ஒரு மாத தடையும், அபராதமும் விதிக்கப்பட்டன. அடுத்த 15 மாதங்களுக்கு ஆடம்ஸ் மருத்துவமனையில் தங்கியிருந்தார்.
ஆடம்ஸை வீடொன்றில் தங்க வைக்க அவர் விளையாடிய அணிகள் விரும்பின. ஆனால், நிம்ஸில் உள்ள தமது வீட்டிலேயே கணவரை வைத்து பராமரிப்பேன் என மனைவி வலியுறுத்தினார். ஆடம்ஸ் இறக்கும் வரை அங்கேயே தங்கியிருந்தார்.
பெர்னாடெட் வெள்ளையின பெண். ஆடம்ஸ் கருப்பினத்தவர். சமூகத்தின் எதிர்ப்பின் மத்தியில் ஆடம்ஸை திருமணம் செய்த நினைவுகளை அவர் ஊடகங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.
திங்களன்று ஆடம்ஸின் இறப்பு வரை அந்த தம்பதி ஒன்றாக- கிட்டத்தட்ட 52 வருடங்களாக வாழ்ந்தனர்.
தனது கணவருக்காக பெர்னாடெட் அதிக நேரம் செலவிட்டார். அவருக்கு பக்கத்தில் இருந்தார், அவருடன் பேசினார், அவரை அலங்கரித்தார் கிறிஸ்துமஸ் மற்றும் அவரது பிறந்தநாளில் அவருக்கு பரிசுகளை வழங்கினார்.
ஆடம்ஸின் பராமரிப்பை வேறு தரப்பிடம் ஒப்படைக்கலாம் அல்லது அவரை கருணைக் கொலை செய்யலாம் எனஅப்பிராயங்கள் முன்வைக்கப்பட்ட போது உறுதியாக மறுத்து விட்டார்.
என்று போற்றப்பட்டார்.
ஜீன் பியர் ஆடம்ஸ்- தனது சிறப்பான கால்பந்தாட்டத்திற்காகவும், மருத்துவமனையின் தவறால் 40 ஆண்டுகள் கோமாவில் வாழ்ந்தார் என்ற செய்திக்காககவும் மட்டுமல்லாமல், பெர்னாடெட்டின் காதலுக்காகவும் வரலாற்றில் வாழ்வார்.