27.6 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இலங்கை

யாழ்ப்பாணத்திற்கு 100 காட்போட் அட்டை பிரேதப்பெட்டி வாங்கும் தொழிலதிபர்!

கோவிட் 19 தொற்றுநோயால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய பயன்படுத்தப்படும் காட்போட் அட்டை சவப்பெட்டிகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதாக தெஹிவளை கல்கிசை நகராட்சி மன்ற உறுப்பினர் பிரியந்த சஹபந்து நேற்று தெரிவித்தார்.

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய பயன்படுத்த காட்போட் அட்டை சவப்பெட்டிகளை முதலில் தெஹிவளை கல்கிஸ்சை நகராட்சி மன்றம் அறிமுகப்படுத்தியது. தெஹிவளை கல்கிஸ்சை நகராட்சி மன்ற உறுப்பினர் பிரியந்த சகபந்துவே இந்த திட்டத்தின் முன்னோடி.

இதை தொடர்ந்து, தெஹிவோவிட்ட, பெல்மடுல்ல, வரகாபொல, பெலியத்த பிரதேச சபைகள் இந்த சவப்பெட்டிகளை கோரியுள்ளதாகவும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தொழிலதிபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 100 சவப்பெட்டிகளை கோரியதாகவும், நத்தாண்டிய பிரதேச சபையிலிருந்தும் அழைப்பு வந்தது என தெஹிவளை கல்கிஸ்சை நகராட்சி மன்ற உறுப்பினர் பிரியந்த சகபந்து தெரிவித்துள்ளார்.

மரத்தால் தயாரிக்கப்படும் சவப்பெட்டி முழுமையாக எரிவதற்கு அரை மணி நேரம் ஆகும், அதேசமயம் அட்டைப் பெட்டி ஐந்து நிமிடங்களில் முழுமையாக எரிந்துவிடும். எனவே அட்டை சவப்பெட்டிகளில் உடல்களை தகனம் செய்யும் போது தகனங்களில் பயன்படுத்தப்படும் எரிவாயுவின் அளவு குறைகிறது. மேலும் கோவிட் -19 தவிர மற்ற காரணங்களால் சராசரியாக 400 பேர் தினமும் இறக்கின்றனர். தினமும் 200 மரங்கள் சவப்பெட்டிகளை தயாரிக்க வெட்டப்படுகின்றன.

எனவே அட்டை சவப்பெட்டிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என சஹபந்து கூறினார்.

தற்போது தெஹிவளை கல்கிஸ்சை நகராட்சி மன்றத்தால் அட்டை சவப்பெட்டிகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

சீனாவில் தொற்றுநோய் பரவுவதற்கு முன்பு இந்த திட்டம் 2019 இல் சகபந்துவால் நகராட்சி மன்றத்திற்கு வழங்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் 13 இந்திய மீனவர்கள் கைது – கடற்படையின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயம்

east tamil

அரிசி விற்பனையில் கலப்பு!

east tamil

மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

பணிப்பகிஷ்கரிப்பில் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்

east tamil

ஊடகவியலாளர் மீது குற்றச்சாட்டு

east tamil

Leave a Comment