எகிப்தை சேர்ந்தவர் இப்ராஹிம் ஹமாதோ 48. அவரது 10 வயதில் ஏற்பட்ட ரயில் விபத்தில் இரு களையும் இழந்தார். இதனால் மற்றவர்கள் பரிதாபம், அனுதாபப்படுவதை தவிர்க்க பகலில் வீட்டை விட்டு வெளியே வர விரும்ப மாட்டார்கள். பிறகு நண்பர்களுடன் இணைந்து கால்பந்து விளையாடத் தொடங்கினார்.
பிறகு சவாலான டேபிள் டென்னிசை தேர்வு செய்தார். வலது காலால் பந்தை துக்கி போட்டு ‘சர்வீஸ்’ செய்யும் இப்ராஹிம், வாயில் டேபிள் டென்னிஸ் ராக்கெட்டை வைத்து பந்தை அடிக்கிறார். 2011, 2013 ஆப்ரிக்க சாம்பியன்ஷிப், எகிப்து ஓபன் (2013) தொடரில் அசத்திய இவர், மூன்று வெள்ளிப்பதக்கம் வென்றார். இதனால் பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
2016 ஆப்ரிக்க சாம்பியன்ஷிப்பில் 2 வது இடம் பெற்ற இவர், 43 வயதில் ரியோ பாராலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றார். ஒற்றையரில் 11, அணிகள் பிரிவில் 9வது இடம் கிடைத்தது. தற்போது மீண்டும் களமிறங்கிய இப்ராஹிம், முதல் போட்டியில் தென் கொரியாவின் பார்க்கிடம் வீழ்ந்தார். இருப்பினும் இரு கைகள் இல்லாத போதும் மன உறுதியுடன் போராடி, பாராலிம்பிக் வீரராக ஜொலித்தார். இன்று தனது இரண்டாவது போட்டியில் சீன வீரர் சென் சாவோவை சந்திக்கிறார். இதில் வென்றால் ‘நாக் அவுட்’ சுற்றுக்கு முன்னேறலாம்.
ஒருமுறை நண்பர்கள் மோதிய டேபிள் டென்னிஸ் கிளப் போட்டியில் நடுவராக இருந்தேன். ஒருவருக்கு சாதகமாக புள்ளி வழங்கியதாக கோபப்பட்ட ஒரு நண்பர், ‘உன்னால் இப்போட்டியை விளையாட முடியாது. இதில் ஏன் நீ தலையிடுகிறாய், உன்னால் எதை செய்ய முடியுமோ, அதில் உறுதியாக இரு,’ என்றார். இந்த வார்த்தை எனக்கு துாண்டுகோலாக அமைய, டேபிள் டென்னிசை தேர்வு செய்தேன்.
துவக்கத்தில் அக்குள் பகுதியில் ராக்கெட்டை வைத்து விளையாடினேன். இது சரிப்பட்டு வராமல் போக, வாயால் விளையாடினேன். முதல் போட்டியில் முடிந்தவரை சிறப்பாக செயல்பட்டேன். மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லை. அடுத்த போட்டியில் வெல்வேன் என நம்புகிறேன், ” என்றார்.




