முக்கியஸ்தர்களின் பிள்ளைகளிற்கும் பைசர் தடுப்பூசி செலுத்தியதால் சர்ச்சை (VIDEO)

Date:

சிலாபம், கொக்காவில பாடசாலையில் நிறுவப்பட்ட தடுப்பூசி மையத்தில் 12-18 வயதுக்குட்பட்ட சிறார்களிற்கு பைசர் பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாட்ட விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தினுஷ பெர்னாண்டோ கூறினார்.

சில பாதுகாப்பு மற்றும் சுகாதார துறையினரின் நெருங்கிய உறவினர்களின் பிள்ளைகளிற்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதால், நீண்டநேரமாக காத்திருந்த அப்பகுதியைச் சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்ட ஏராளமானவர்கள் நேற்று முன்தினம் தடுப்பூசி மையத்தில் ஃபைசர் தடுப்பூசியைப் பெற முடியவில்லை.

இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு அப்பகுதியைச் சேர்ந்த ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிலாபம் கொக்காவில தடுப்பூசி மையத்தில் நேற்று முன்தினம் ஒரு மருத்துவரின் பிள்ளைகளுக்கும் ஃபைசர் தடுப்பூசி போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் சுகாதார  வைத்திய அதிகாரி பிரிவின் வைத்தியர் அருள்தேவி அருணாசலம் இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

குடும்ப சுகாதார சேவைகள் பிரிவின் பெண் அலுவலர் உள்ளிட்ட சிலர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக தேர்தலில் யாரும் எதிர்பாராத திருப்பம்.. தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவு… த.வெ.க முன்னிலையில்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர், துணை முதல்வர் உட்பட திமுக அமைச்சர்கள்...

முல்லைத்தீவில் இரு மீனவர்கள் மாயம்

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல்...

யாழில் பியர் போத்தலால் தாக்கப்பட்டவர் பலி

யாழ்ப்பாணத்தில் பியர் போத்தலால் தாக்கப்பட்டதில் 36 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்