கொழும்பு- திருச்சி விமான சேவை மீண்டும் தொடங்கவுள்ளது.
கொரோனா தொற்றையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகளை நிறுத்தியிருந்தது. இதன்படி திருச்சியில் இருந்து இயக்கப்பட்டு வந்த இலங்கைக்கான விமான சேவை முடங்கியது.
தற்போது கொரோனா விமான சேவைகள் வழக்கத்திற்கு திரும்பும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதையடுத்து கொழும்பு- திருச்சிக்கிடையில் சிறப்பு விமானங்கள் இயக்குவதற்கு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவு செய்து பயணிகளின் முன் பதிவையும் தொடங்கியுள்ளது.
அந்த விமானங்கள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 2, 9, 16, 23 மற்றும் 30 ஆகிய திகதிகளில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் கொழும்பில் இருந்து புறப்பட்டு காலை 9 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைகிறது. திருச்சியிலிருந்து கொழும்புவிற்கு காலை 10 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.
இந்த விமான சேவை திருச்சியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று தெரிய வருகிறது.



