செய்வதறியாது கண்கலங்கி நிற்கும் விஜய் சேதுபதி!

Date:

தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுத்து வந்த எஸ்.பி. ஜனநாதன் கடைசியாக இயக்கிய படம் லாபம். விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முதல் முறையாக ஜோடியாக நடித்திருக்கிறார்கள். கொரோனா வைரஸின் தாக்கம் சற்று குறைந்தவுடன் படப்பிடிப்பை நடத்தி முடித்தார் ஜனநாதன். படப்பிடிப்பு முடிந்த பிறகு ஜனநாதனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதி உயிரிழந்தார். ஜனநாதனின் மறைவால் ஏற்பட்ட துக்கம் தாங்க முடியாமல் விஜய் சேதுபதி புதுச்சேரியில் இருக்கும் ஆசிரமத்தில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் லாபம் படம் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி தியட்டர்களில் ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. லாபம் படம் வெற்றிகரமாக ரிலீஸாகும் சந்தோஷத்தில் இருந்தாலும் அதை பார்க்க தன் நண்பர் ஜனநாதன் உயிருடன் இல்லையே என்கிற கவலையில் இருக்கிறார் விஜய் சேதுபதி.

லாபம் படத்தில் ஜகபதி பாபு தான் வில்லன். 5 ஆண்டுகள் கழித்து ஸ்ருதி ஹாசன் நடித்திருக்கும் தமிழ் படம் லாபம். கலையரசன், சாய் தன்ஷிகா, ப்ரித்வி பாண்டிராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார்.
லாபம் படத்தின் முதல்பாதிக்கான எடிட்டிங் பணி முடிந்திருந்த நிலையில் ஜனநாதன் இறந்துவிட்டார். ஆனால் இந்த படம் எப்படி இருக்க வேண்டும் என்று எடிட்டரிடம் ஜனநாதன் விரிவாக விளக்கியிருந்திருக்கிறார். அதை வைத்து இரண்டாம் பாதியை எடிட் செய்திருக்கிறார்கள். ஜனநாதன் ஆசைப்பட்ட படியே படம் வந்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெற்றி பெறும் தவெக வேட்பாளர்களை மாமல்லபுரம் ‘ரிசார்ட்’டில் பாதுகாக்க திட்டம்: நிர்வாகிகள் ரகசிய ஏற்பாடு

இன்று வெளி​யாகும் தேர்​தல் முடிவு​களுக்​குப் பிறகு தனது கட்சி எம்​எல்​ஏ-க்​களை பாது​காக்க...

மணலுடன் சென்ற பூநகரி பிரதேசசபை உழவு இயந்திரத்தை பறிமுதல் செய்த பொலிசார்

பூநகரி பிரதேச சபைக்குரிய உழவு இயந்திரம் ஒன்று அனுமதியற்ற மணலுடன் விசேடஅதிரடிப்படையினரால்...

அமெரிக்காவுடனான பேச்சுக்கு பல நிபந்தனைகளை கைவிட்டது ஈரான்!

ஈரான் தனது முந்தைய சில நிபந்தனைகளைக் கைவிட்டு, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்