COVID-19 க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விற்றமின் C, D, Zinc பயன்படுத்தப்படலாம் என்று சுகாதார அமைச்சு கூறுகிறது.
இந்த மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மருந்தியல் பேராசிரியரும் பொது மருத்துவ நிபுணருமான வைத்தியர் பிரியதர்ஷனி கலபதி தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
இந்த விற்றமின்கள் நோயாளிகளுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இருப்பினும் காய்ச்சல் மற்றும் உடல் வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரசிட்டமோல் மட்டுமே பரிந்துரைக்க முடியும் என்று அவர் கூறினார்.
காய்ச்சல் மற்றும் உடல் வலியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இப்யூபுரூஃபன், டிக்லோஃபெனாக் மற்றும் மெஃபெனாமிக் அசிட் போன்ற ஸ்டீரொய்ட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படவில்லை. ஏனெனில் இது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். என தெரிவித்தார்.
நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் பயன்படுத்தும் மருந்துகள் கோவிட் -19 தடுப்பூசிகளின் செயல்திறனை பாதிக்காது. நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறும் நபர்கள் கோவிட் -19 தடுப்பூசியைப் பெறலாம், அத்தகைய நபர்கள் தடுப்பூசியைப் பெற வேண்டும். கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பை கொண்டுள்ளதாக கூறி, அதிக விலைக்கு விற்கப்படும் மருந்தைப் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.



