நடிகை மீரா மிதுன் பட்டியலினத்தவர் பற்றி மோசமாக பேசியதால் அவர் மீது போலீசார் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதன் பின் ‘வாய்தவறி பேசிவிட்டேன்’ என சொல்லி ஜமீனுக்கு மீரா மிதுன் மனு செய்த நிலையில் கோர்ட் அதை தள்ளுபடி செய்து வருகிறது.
மீரா மிதுன் பேசியது மிகப்பெரிய அளவில் சர்ச்சை ஆன நிலையில் அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் மக்கள் கூறினர். ‘வாய்தவறி பட்டியலினத்தவர் பற்றி பேசிவிட்டேன். நான் பல படங்களில் நடிக்கிறேன், சிறையில் இருந்து நான் கால்ஷீட் கொடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுகிறது ‘என கேட்டார்.
ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்த போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு ஜமீனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் போலீசார் மீரா மிதுன் மீது அதிக வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. விசாரணை தற்போது ஆரம்பத்தில் இருந்து மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்க கூடாது என நீதிபதி தீர்ப்பு அளித்து உள்ளார்.