14வது ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் பெங்களூர் அணியில் ஆட, சிங்கப்பூரைச் சேர்ந்த டிம் டேவிட் ஒப்பந்தமாகியுள்ளார். ஐபிஎல் தொடரில் ஒப்பந்தமான முதல் சிங்கப்பூர் வீரர் அவர்தான்.
25 வயது டிம் டேவிட், பெங்களூர் அணிக்காக விளையாடவுள்ளார். அந்த அணிக்காக இலங்கையில் வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர ஆகியோருடன், வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் டிம் டேவிட்டும் நேற்று இணைந்தார்.
அதிரடி ஆட்டத்திற்குப் பெயர்போன டிம் டேவிட் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் என உலகின் பல ரி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியுள்ளார்.
சிங்கப்பூருக்காக இதுவரை அவர் 14 ரி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் COVID-19 பரவல் அதிகரித்ததால், அப்போது நடந்து கொண்டிருந்த 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது.
இப்போது தொடரின் மீதமுள்ள போட்டிகள், செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கவிருக்கின்றன.