ஐபிஎல் 2021 தொடரில் இலங்கை வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீரர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. விராட் கோலி தலைமையிலான ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருவரும் ஒப்பந்தமாகியுள்ளனர்.
இந்தியாவில் மே மாதம் கோவிட் -19 தொற்று அதிகரித்ததால் ஐபிஎல் 2021 காலவரையின்றி நிறுத்தப்பட்டது. அந்த போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி அக்டோபர் 15 அன்று நடத்தப்படும்.
வனிந்து ஹசரங்க தற்போது உலக ரி 20 பந்துவீச்சு தரவரிசையில் 2 வது இடத்தில் உள்ளார். சமீர தனது கடைசி மூன்று தொடர்களில் அனைவரையும் கவர்ந்தார். இந்த நிலையில் அவர்கள் ஐபிஎல் தொடரில் இணைந்துள்ளனர்.
ஐபிஎல் 2021 தொடரில் ராயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம்பெறும் வெளிநாட்டு வீரர்கள்:
ஏபிடி வில்லியர்ஸ்
கிளின் மக்ஸ்வெல்
வனிந்து ஹசரங்க
துஷ்மந்த சமீர
டிம் டேவிட்
டான் கிறிஸ்டியன்
கைல் ஜெமிசன்
🔊 ANNOUNCEMENT 🔊
Dushmantha Chameera, Sri Lankan fast bowler, is ready to #PlayBold as he joins RCB for the UAE leg of #IPL 2021. Chameera replaces Daniel Sams. Welcome to the family, Chameera.#PlayBold #WeAreChallengers #IPL2021 #NowAChallenger pic.twitter.com/BD0AGZeuE5
— Royal Challengers Bangalore (@RCBTweets) August 21, 2021