ஓணம் பண்டிகையை சிறப்பிக்க எரிசேரி ரெசிபி இதோ!

Date:

ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் ருசியான உணவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில் இன்று எரிசேரி ரெசிபிவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சேனைக்கிழங்கு – 100 கிராம் நேந்திரங்காய் – ஒன்று
கறிவேப்பிலை – தேவைக்கு
மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
தேங்காய் எண்ணெய் – 100 கிராம்
தேங்காய் துருவல் – ஒரு கப்
சீரகம் – ஒரு தேக்கரண்டி
நெய் – 25 கிராம்
கடுகு – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – தேவைக்கு

செய்முறை:

சேனையையும், நேந்திரங்காயையும் துண்டுகளாக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகளை போட்டு கறிவேப்பிலை, மிளகு தூள், உப்பு, தேங்காய் எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவையுங்கள். கால் கப் தேங்காய் துருவலில் சீரகம் சேர்த்து அரைத்து அதை வேகவைத்த காய்கறியில் சேருங்கள்.

மீதமுள்ள தேங்காய் துருவலை நன்றாக அரைத்து, எண்ணெயை சூடாக்கி அதில் கொட்டி வறுத்து பிரவுன் நிறமாகும்போது எடுத்து குழம்பில் சேருங்கள். நெய்யை சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை தாளித்து குழம்பில் கலந்து பரிமாறலாம்.

spot_imgspot_img

More like this
Related

கன்னியா பகுதியில் விகாரை அமைக்க திட்டம்; தமிழ் மக்களின் உணர்வுகளை அரசாங்கம் மதிக்க வேண்டு

திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்று, மத மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த கன்னியா...

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்