புலிகளின் புதையல் தோண்ட முயற்சித்த இருவர் கைது!

Date:

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அழகாபுரி பகுதியில் விடுதலைப் புலிகளின் புதையல் தோண்ட முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 8.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்த இருவர், யாழ்ப்பாணம், விசுவமடுப் பகுதிகளைச் சேர்ந்த தலா ஒவ்வொருவர் கைது செய்யப்பட்டதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்களிடம் இருந்து புதையல் இருப்பதைக் கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஸ்கானர் கருவி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். கைதானவர்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள்.

spot_imgspot_img

More like this
Related

உள்ளாடைக்குள் ஹெரோயின் கடத்திய பாத்திமாவுக்கு ஆயுள் தண்டனை

4.90 கிராம் ஹெரோயின் வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனத்...

பத்மே, செவ்வந்தியை அரச பகுப்பாய்வாளரிடம் முற்படுத்த நடவடிக்கை

'கனேமுல்ல சஞ்சீவ'வின் கொலை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, 'கேஹெல்பத்தர பத்N'...

11 கொலைகள் செய்த பாதாள உலக துப்பாக்கிதாரிக்கு தமிழ் பெயரில் போலி அடையாள அட்டை: வசமாக சிக்கிய விதானையார்!

தலங்கம, அகுரேகொடவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு அருகில் சட்டத்தரணி மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்