31.3 C
Jaffna
March 28, 2024
ஆன்மிகம்

சுதந்திரமாக இருக்க விரும்பும் ராசிகள்

ஜோதிட அடிப்படையில் ஒருவரின் ராசி,நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்து அவரின் தோற்றம், குணம் போன்றவற்றைக் கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் சில பொதுவான குணநலன்கள் கணிக்கலாம். அந்த வகையில் சில ராசியினர் எப்போதும் தன் துணையை அல்லது ஒரு நபருடன் சேர்ந்து இருக்க வேண்டும். கூட்டாளருடன் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். தனியாக இருக்க விரும்பாமல் எப்போதும், எல்லா விஷயங்களிலும் ஜோடியாக இருக்க விரும்புகின்றனர்.

சில ராசியினரோ, தன் திருமண உறவில் துணை இருந்தாலும், அவர்களை கவனித்துக் கொள்ள ஏதேனும் ஒரு நபர் இருந்தாலும் எப்போதும் தனியாக சுந்திரமாக நேரத்தை செலவிட விரும்புவர். தனக்கென ஒரு தனி நேரம், தனிமை வேண்டும் என நினைப்பார்கள். அப்படி எந்த ராசியினர் எப்போதும் துணையுடன் இருக்க வேண்டும், யார் தனியாக சுதந்திரமாக இருந்தால் தான் மகிழ்ச்சியாக இருக்கும் என நினைக்கும் ராசியினரைக் குறித்து வரிசையாக பார்ப்போம். அதிகம் துணையுடன் இருக்க விரும்பும் ராசியிலிருந்து பார்ப்போம்.

​கடகம்

கடக ராசியினர் எப்போதும் தங்கள் துணை, பங்குதாரருடன் தொடர்பில் இருப்பார்கள். இவர்களின் அன்பு தொடுதலில் இருக்கும் என நினைப்பார்கள். இல்லையெனில் எப்போதும் பேசிக்கொண்டு, ஏதேனும் ஒரு தொலைத் தொடர்பை பயன்படுத்தி இணைந்திருக்க வேண்டும் என நினைப்பார்கள். சிறிது நேரம் தன் துணை அல்லது பிடித்தமானவரைப் பிரிந்துவிட்டால் அல்லது அவர் நேரம் ஒதுக்கவில்லை என்றால் அதுகுறித்து கவலைப்படத் தொடங்கிவிடுவார்கள்.

​துலாம்

துலாம் ராசியினர் எப்போதும், எந்த ஒரு சூழலிலும் தனியாக வாழ விரும்ப மாட்டார்கள். அவர்களைச் சுற்றி எப்போதும் யாரேனும் தேவைப்படுவார்கள். வீட்டில் தனிமையில் இருப்பதைக் கூட விரும்பமாட்டார்கள். தன் துணை அல்லது வேலையில் தன் உடன் பணிபுரிபவர் என யாரேனும் உடன் இருக்க வேண்டும். மற்றவர்களுடன் இருக்க வேண்டும், சாந்திருக்க நினைப்பார்கள். இருப்பினும் இவர்கள் அழகான, ஆளுமைக்கு பெயர்பெற்றவர்கள்.

​மீனம்

மீன ராசியினர் யாரையேனும் நேசிக்க நினைப்பதோடு, தங்கள் கவலையை அல்லது சுக, துக்கங்களை யாரேனும் ஒருவரிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவார்கள். எப்போதும் ஒருவரும் சேர்ந்திருக்க விரும்புவார்களே தவிர தனியாக இருக்க முடியாது. தன் துணை தன் மீது ஆரவமில்லாமல் இருப்பதை உணர்ந்தால் உடனே அவர்கள் வருத்தப்படத் தொடங்கிவிடுவார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசியினர் பொறுமையாகவும், அமைதியாகவும் இருப்பதால் அவர்களின் தேவையை தெரிந்து கொள்வது எளிதல்ல. இவர்கள் தன் துணையை நேசிப்பதைப் போல, அவரும் தன்னை நேசிக்க நினைப்பார்கள். மற்றவர்களை நம்புவதற்கு அதிக நேரம் எடுக்கும். பல நேரங்களில் தன் நம்பிக்கை உரியவர்களுடன் இருக்க நினைப்பார்கள்.

​கன்னி

கன்னி ராசியினர் குறைந்தளவு தான் விரும்பும் அல்லது நினைக்கும் நபருடன் இருக்க விரும்புவர். மற்ற நேரங்களில் தனியாக சுதந்திரமாக இருக்க விருப்பப்படுவர். தனக்கு விருப்பமான நபருடன் அதிக நேரம் செலவிட விரும்புவர். ஆனால் அவர்கள் அப்படி இல்லையெனில் அது குறித்து கவலைப்படாமல் தனிமையில் இனிமை காண நினைப்பார்கள்.

​விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு ஒருவர் மீது எப்போதும் அதிக காதல் அல்லது விருப்பத்துடன் இருப்பார். ஆனால் அவர்கள் அன்பு செலுத்துகின்ற அளவுக்கு அவர்களுக்கு அன்பு கிடைக்கவில்லையெனில் மிகவும் வருத்தப்படுவர். முதலீடு செய்து லாபத்தை எதிர்பார்ப்பது போல, அன்பும் அதிகமாக எதிர்பார்ப்பார்கள். இருப்பினும் கிடைக்கவில்லையெனில் வேறு விஷயங்களில் கவனம் செலுத்த விரும்புவர்.

​மிதுனம்

மிதுன ராசியினருக்கு இருமுகம் உண்டு எனலாம். இவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் வாழ விரும்புவர், அதே சமயம் நட்பு, துணை என இருந்தால் அதில் ஆழமான உறவு இருக்க வேண்டும் எனவும் நினைப்பார்கள். தனியாக எதையும் சமாளிக்க முடியும் என்றாலும் யாரேனும் உடன் இருக்க நினைப்பார்கள். தான் விரும்பக்கூடிய நபர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பார்கள்.

​சிம்மம்

சிம்ம ராசியினர் சற்று தனிமையை விரும்பக்கூடியவர்கள். இவர்கள் அதிகம் ஆளுமை செலுத்த விரும்புவதோடு, எந்த ஒரு உறவு, விருப்பத்திலும் அதிக கவனம் செலுத்தக்கூடியவர்கள். தங்களைச் சுற்றியுள்ளவர்களால் பாராட்டு கிடைக்க வேண்டும், அன்பு கிடைக்க வேண்டும் என விரும்புவார்கள்.

​மகரம்

மகர ராசியினர் எந்த ஒரு உறவு அல்லது நம்பிக்கைக்குரிய நபரை தேர்ந்தெடுப்பதற்கு அதிக நேரம் எடுக்கும். ஆரம்பத்தில் எந்த ஒரு நபருடனும் பெரியளவில் உறவு, நட்பு, தொடர்பு கொள்ள விரும்பமாட்டார்கள். அப்படி சரியான நபர் கிடைத்தால் அவருடன் எப்போதும் இருக்க விரும்புவர் இல்லையெனில் தனிமையே இனிமை என இருப்பார்கள்.

​கும்பம்

கும்ப ராசியினர் தனிமையில் தன்னிறைவு, மகிழ்ச்சி அடையக்கூடியவர்கள். எந்த ஒரு சூழலாக இருந்தாலும் சரி, உணர்வுகளை வெளிப்படுத்த நினைத்தாலும் அது தனிமையில் செய்ய நினைப்பார்கள். தேவைப்படும் போது மட்டும் தன் விருப்பமான நபருடன் இருப்பார்கள். பெரும்பாலும் தன் சொந்த விஷயங்களாக இருந்தாலும், ஓய்வு எடுப்பதாக இருந்தாலும் அது தனிமையில் இருந்தாலே சுகம் என நினைப்பார்கள்.

​மேஷம்

மேஷ ராசியினர் மிகவும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். இவர்கள் ஒரு நபரை சார்ந்து மட்டும் இருக்க வேண்டும் என்று விரும்புவதில்லை. தன் சுதந்திரம் முக்கியம் என நினைப்பதால், மற்றவர்களின் உணர்வுகள், திட்டங்களுக்காக தன் தனிமை, திட்டங்களை மாற்ற விரும்பாதவர்கள்.

​தனுசு

தனுசு ராசியினர் சுதந்திரமானவர்கள். இவர்கள் சொந்தமாக எதையும் செய்ய முடியும் மற்றும் இவர்களுக்காக வேறு யாரும் அதை செய்ய தேவையில்லை என நினைப்பார்கள். எனவே, அவர்கள் தங்கள் பணி அல்லது வாழ்க்கையில் மற்றவர்களை அனுமதிக்க விரும்ப மாட்டார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

Pagetamil

புத்தாண்டு பலன்கள் 2024: மீனம் ராசியினருக்கு எப்படி?

Pagetamil

புத்தாண்டு பலன்கள் 2024: தனுசு ராசியினருக்கு எப்படி?

Pagetamil

புத்தாண்டு பலன்கள் 2024: மகரம் ராசியினருக்கு எப்படி?

Pagetamil

புத்தாண்டு பலன்கள் 2024: கும்பம் ராசியினருக்கு எப்படி?

Pagetamil

Leave a Comment