24.4 C
Jaffna
January 28, 2025
Pagetamil
விளையாட்டு

2 பேட்ஸ்மேன்கள் நீக்கம் அதிரடி வீரர் சேர்ப்பு: இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்தியா, இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி மழை காரணமாக டிரா ஆன நிலையில், இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்திய அணி டெய்ல் என்டர்ஸ் முகமது ஷமி, ஜஸ்பரீத் பும்ரா இருவரும் 9ஆவது விக்கெட்டிற்கு சராசரியாக 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இதனால், இங்கிலாந்து அணி கடைசி இரண்டு செஷன்களில் 272 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்து ஓபனர்கள் ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்லி இருவரும் டக்-அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்கள். இவர்கள் 10 ஓவர்வரை தாக்குப் பிடித்திருந்தாலே, ஆட்டத்தை டிரா செய்திருக்க முடியும் எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டோமினிக் சிப்லி, ஜாக் கிரௌலி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாற்றாக அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மலான் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் கடைசியாக 2018ஆம் ஆண்டில்தான் டெஸ்ட் விளையாடியிருந்தார். இந்நிலையில் மூன்று வருடங்களுக்குப் பிறகு அணிக்குத் திரும்பியுள்ளார்.

மேலும் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷாகிப் மேக்மூத் XI அணியில் சேர்க்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இவர், சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள், டி20 போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசி மேட்ச் வின்னராக இருந்திருந்தார். இந்நிலையில் தற்போது மூன்றாவது டெஸ்டில் சாம் கரனுக்கு மாற்றாகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் கவுண்டி கிரிக்கெட்டில் யாக்ஷிர் அணிக்காக ஒரு இன்னிங்ஸில் 199 ரன்கள் அடித்திருந்தார். இதனால் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாகச் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணி (மூன்றாவது டெஸ்ட்): ஜோ ரூட் (கேப்டன்), மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரன், ஹசீப் ஹமீது, டேனியல் லாரன்ஸ், ஷாகிப் மேக்மூத், டேவிட் மலான், க்ரேயக் ஓவர்டன், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், மார்க் உட்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

`இளம் எம்.பி -யைக் கரம் பிடிக்கும் ரிங்கு சிங்’; யார் இந்த பிரியா சரோஜ்?

Pagetamil

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

Leave a Comment