பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை மீரா மிதுன் நேற்று கேரளாவில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தற்போது சென்னை அழைத்துவரப்பட்டுள்ளார்.
நடிகை மீரா மிதுன் டுவிட்டர் பக்கத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் சினிமாவில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இயக்குனர்கள் பற்றிய இழிவான கருத்துகள் பதிவிடப்பட்டது, அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல புகார்கள் வழங்கப்பட்டன.
இந்த புகாரின் அடிப்படையில் மீராமிதுன் மீது 7 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று விசாரணைக்கு ஆஜராகும்படி மீராமிதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இருந்தபோதிலும் மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதேவேளையில் என்னை கைது செய்ய முடியாது என்று மீராமிதுன் போலீசாருக்கு சவால் விட்டார்.
இந்த நிலையில் நேற்று கேரள மாநிலம் ஆலப்புழாவில் தெரிந்தவர் ஒருவருடைய நட்சத்திர விடுதியில் மீரா மிதுன் தங்கி இருந்ததாக தகவல் கிடைத்தது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நேரடியாக அங்கு சென்று அவரை கைது செய்தனர். கைது செய்யப்படும்போது அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தனக்கு எதிராக காவல்துறையினர் அராஜகமாக செயல்படுவதாக வீடியோ பதிவையும் வெளியிட்டார்.
காவல்துறையினர் அழைத்து வந்தபோது ஊடகங்களை பார்த்து எனக்கு சாப்பாடு கொடுக்கவில்லை, போலீசார் தன் கையை உடைத்து விட்டனர், கடந்த மூன்று வருடங்களாக நான் கொடுத்த புகார்களை காவல்துறையினர் எடுக்கவில்லை, என் படம் ரிலீஸ் ஆக கூடாதுனு எனக்கு அரஜகம் பன்னிட்டு வருகிறது ஊடகங்களை பார்த்து கதறிக்கொண்டே சென்றார்.