காபூலுக்குள் நுழைய மாட்டோம்; ஆப்கான் அரசு சரணடைய பேச்சுவார்த்தை: தலிபான்கள் அறிவிப்பு!

Date:

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலுக்குள் தலிபான்கள் நுழையத் தொடங்கியுள்ளதாக, ஆப்கான் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், தலிபான்கள் சற்று முன்னர் அதை மறுத்துள்ளனர். .

பாகிஸ்தானுடன் நாட்டை இணைக்கும் முக்கிய சாலைகளை கைப்பற்றி, முக்கிய கிழக்கு நகரமான ஜலாலாபாத்தின் கட்டுப்பாட்டை தலிபான்கள் கைப்பற்றிய சில மணிநேரங்களுக்குப் பிறகு இன்று ஞாயிற்றுக்கிழமை காபூலுக்குள் தலிபான்கள் நுழைய ஆரம்பித்துள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்தது.

காபூலை சுற்றியுள்ள 5 மாகாணங்களில் 3 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.

காபூலின் தெற்கில் உள்ள லோகர் மாகாணத்தையும், காபூலின் கிழக்கில் லக்மான் மாகாணத்தையும் சனிக்கிழமை இரவு தலிபான்கள் கைப்பற்றினர், இப்போது ஞாயிற்றுக்கிழமை காலை மேற்கிலுள்ள வார்தாக் மாகாணத்தையும் கைப்பற்றினர்.

எஞ்சியுள்ள இரண்டு மாகாணங்களான பர்வான் மற்றும் கபிசாவில் கடுமையான மோதல் நடந்து வருகிறது.  கபிசா மாகாணத்தின் மீது பெரும்பாலான கட்டுப்பாட்டை ஆப்கானிஸ்தான் அரசாங்கம் கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் அரசுக்கும் குழுவுக்கும் இடையே பல ஆண்டுகளாக அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் தோஹாவில் உள்ள ஒரு தலிபான் தலைவர், ஞாயிற்றுக்கிழமை போராளிகள் வன்முறையிலிருந்து விலகி காபூலை விட்டு வெளியேற விரும்புவோருக்கு பாதுகாப்பான வழியை வழங்க உத்தரவிடப்பட்டதாக கூறினார்.

ஜனாதிபதி அஷ்ரப் கானியின் அரசாங்கம் எதிர் தாக்குதலை நடத்துமா அல்லது சரணடையுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இதேவேளை, இன்று தலிபான்கள் வெளியிட்ட அறிக்கையில், தலைநகர் காபூலுக்குள் நுழைய போராளிகளுக்கு எந்த விருப்பமும் இல்லை என்றும் அமைதியாக நகரத்திற்குள் நுழைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காபூல் ஆப்கானிஸ்தானின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும். போராளிகள் நகரத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. காபூலின் வாயில்களிற்கு வெளியே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைதியாக சரணடைய ஆப்கானிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது மற்றும் காபூலை ராணுவ ரீதியாக வீழ்த்துவதற்கு எந்த திட்டமும் இல்லை என தலிபான் தெரிவித்துள்ளது.

நகரத்தில் அச்சம் மற்றும் பீதி பரவிய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. தலிபான்கள் நுழைவதாக வெளியான தகலை தொடர்ந்து மக்கள் தெருக்களில் அலைகிறார்கள். கடைகள் மற்றும் சந்தைகளை மூடபட்டன. நகரத்தில் நகர போக்குவரத்து இல்லை.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகை ஃபேஸ்புக் பதிவுகளில் காபூலின் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் ஆப்கானிஸ்தான் தலைநகரைப் பாதுகாக்க சர்வதேச நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது என்றும் கூறியது

காபூலில் உள்ள சிவில் மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசிற்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். நாங்கள் பழிவாங்குவதில்லை, அரசாங்க அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு உள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சதொசவில் 18 அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் குறைப்பு

மத்திய கிழக்கில் நிலவிவரும் பதற்றங்கள் காரணமாக உலகச் சந்தைகளில் விலை உயர்வு...

மோசடி யுவதி கைது!

அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக நாமம் ஒன்றை போலியாகப் பயன்படுத்தி, இணையதளம் மூலம் அதிக...

மரமுந்திரி தோட்டத்தில் ஒருவர் சுட்டுக்கொலை

வாயுத் துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 08 சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்