பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மாவட்ட வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய முன்னாள் வைத்திய அதிகாரி சின்னத்துரை கதிரவேற்பிள்ளை தனது 88வது வயதில் நேற்று காலமானார்.
கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் தனது மகளுடன் வசித்து வந்த நிலையிலேயே காலமானார்.
யுத்த காலத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வளப்பற்றாக்குறை காணப்பட்ட போதிலும் அயராத உழைப்பினால் வைத்தியசாலையை முன்னேற்ற சேவையாற்றியவர்.
கரவெட்டியை சொந்த இடமாக கொண்ட மருத்துவர் சி.கதிரவேற்பிள்ளை, கிளிநொச்சி, தெல்லிப்பளை, பருத்தித்துறை வைத்தியசாலைகளில் மாவட்ட வைத்திய அதிகாரியாக கடமையாற்றி மக்களிடம் அபிமானம் பெற்ற வைத்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1