வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளம் தாயும், 7 நாள் சிசுவும் கொவிட் தொற்று நோயால் இன்று (11) உயிரிழந்தனர்.
குறித்த பெண் பிரவசத்திற்காக வவுனியா வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
ஆபத்து நிலையையடுத்து சிசேரியன் மூலம் குழந்தை பிறந்துள்ளது.
இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தை உயிரிழந்தது. இன்று காலை தாயாரும் உயிரிழந்தார்.
மரணமடைந்தவர்கள் பட்டக்காடு பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணும், அவரது ஒரு வார குழந்தையுமே இவ்வாறு மரணமடைந்தவராவார். குறித்த இருவரினது சடலத்தையும் பூந்தோட்டம் மயானத்தில் தகனம் செய்வதற்குரிய நடவடிக்கையை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1