உடல் எடையை குறைக்கும் பச்சை பப்பாசியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாசிக் காயை கூட்டாக செய்து உண்டு 1 மாதத்தில் குண்டான உடல் படிப்படியாக மெலியும்.
தேவையான பொருட்கள் :
பப்பாசிக்காய் – ஒன்று (சிறியது)
கேரட், வெங்காயம் – தலா ஒன்று
சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்
நறுக்கிய பூண்டு – 2 பல்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
சில்லி ஃபிளேக்ஸ் – ஒரு டீஸ்பூன்
வறுத்த வேர்க்கடலைப்பொடி, – 2 டேபிள்ஸ்பூன்
வறுத்த வெள்ளை எள் – ஒரு டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
ஆரோக்கியமான சாலட் வகைகள்
செய்முறை:
பப்பாசிக்காய், கேரட், வெங்காயம் ஆகியவற்றை நீள நீளமாக மெல்லிய குச்சி போல வெட்டி ஒரு பெரிய பவுலில் போடவும். ஒரு பாட்டிலில் வேர்க்கடலைப் பொடி, ஆலிவ் ஆயில், சோயா சாஸ், நறுக்கிய பூண்டு, உப்பு, மிளகுத்தூள், சில்லி ஃபிளேக்ஸ் ஆகியவற்றைப் போட்டு, மூடியைக்கொண்டு மூடி, நன்றாகக் குலுக்கவும். இந்த டிரெஸ்ஸிங்கை நறுக்கிய காய்கறிகளுடன் கலந்து, வறுத்த வெள்ளை எள்ளை அதன் மேலே தூவிப் பரிமாறவும்.