27.6 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இலங்கை

மட்டக்களப்பு தமிழ் எம்.பியின் சின்னத்தனம்!

இரா.சம்பந்தனிற்கு அவதூறு ஏற்படுத்தும் விதமான வீடியோ காட்சிகளை வெளியிட்ட, பிள்ளையான்குழுவின் பேஸ்புக், யூரியூப் தளம் மீது நடவடிக்கையெடுக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்நாடாளுமன்றத்தில் வலிறுத்தினார்.

கடந்த யூலை மாதம் 19ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு வந்த இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உதவியாளர்களின் உதவியுடன் படிகளை கடந்த செல்வதை வீடியோ படமெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், குறிப்பிட்ட இணையத்திற்கு வழங்கினார்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்புரிமை பிரச்சனையை எழுப்பிய எம்.ஏ.சுமந்திரன், அந்த தளத்தை நிர்வகிப்போர் மீது கடுமையான நடவடிக்கையெடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

அத்துடன், அந்த வீடியோவை எடுத்து, வெளியிட பின்னணியில் செயற்பட்ட சின்னத்தனமாக காரியத்தில் ஈடுபட்ட மடடக்களப்பு எம்.பி யார் என்பதை சூசகமாக தெரிவித்தார்.

“இது வளர்ப்பு சரியில்லை. பிள்ளைகளை வளர்க்கிற பிள்ளைகளை, பிள்ளையாரை வளர்த்தது சரியில்லை“ என்றார்.

நாடாளுமன்ற சிசிரிவி கமராக்களின் உதவியுடன் இந்த சின்னத்தனத்தில் ஈடுபட்ட எம்.பியை அடையாளம் காண வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

யாழ். பல்கலை பிரச்சினைக்கு விரைவு நடவடிக்கை – அரசு அறிவிப்பு

east tamil

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முடிவுகளை அரசாங்கம் மேற்கொள்ளும் – அநுர

east tamil

யாழில் 13 இந்திய மீனவர்கள் கைது – கடற்படையின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயம்

east tamil

அரிசி விற்பனையில் கலப்பு!

east tamil

மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

Leave a Comment