நாட்டில் இன்று 2,796 பேர் COVID-19 தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர். நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 327,019 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் 31,208 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று, COVID-19 இலிருந்து குணமடைந்த 2,487 நபர்கள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 290,794 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று சந்தேகத்தில் 2,963 பேர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.




