மிரட்டும் ராகவா லாரன்ஷின் பர்ஸ்ட் லுக்!

Date:

மிரட்டலான போஸ்டர்களுடன் ராகவா லாரன்ஸ் இயக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியானது. தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்குபவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

இதைத்தொடர்ந்து காஞ்சனா முதல் பாகத்தை இந்தியில் ‘லட்சுமி’ என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்ட ராகவா லாரன்ஸ், தற்போது ருத்ரன், அதிகாரம், சந்திரமுகி 2 ம் பாகம் போன்ற படங்களில் நடிக்கிறார். தொடர்ந்து, அவர் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி படத்திற்கு ‘துர்கா’ என பெயரிடப்பட்டு உள்ளது. திரைப்படத்தை லாரன்ஸ் இயக்கி, நடிப்பதோடு மட்டும் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கவும் உள்ளார். அத்தோடு 2 மிரட்டலான போஸ்டர்களையும் வெளியிட்டு உள்ளார். இதன்மூலம் இதுவும் பேய் படமாக இருக்கலாம் என தெரிகிறது. விரைவில் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

“சிறிமாவோவிடம் ஜே.ஆர். செய்ததை மீண்டும் செய்யாதீர்கள்”: அரசியல் எதிரிகளை நடத்தும் விதம் குறித்து அரசாங்கத்திற்கு தயாசிரி எச்சரிக்கை

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, குற்றவியல் விசாரணைகள் மற்றும் சட்ட...

சிறுமியை சீரழித்த முல்லைத்தீவு ஐயருக்கு விதிக்கப்பட்ட தண்டனை!

முல்லைத்தீவில் 2011-ஆம் ஆண்டு, போரினால் இடம்பெயர்ந்த 17 வயது மாணவி ஒருவரை,...

சாக்கடையில் ஓடிய டீசல்… வாளி, கேன்களுடன் முண்டியடித்த மக்கள்! புளூமெண்டலில் பரபரப்பு!

கொழும்பு, புளூமெண்டல் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் சேமிப்பு முனையத்தில் இன்று (21)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்