பாலிவுட் நடிகரும், இயக்குநருமான அர்பாஸ் கான் நடத்தும் பின்ச் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. இந்த சீசனின் முதல் சிறப்பு விருந்தினராக சல்மான் கான் கலந்து கொண்டார்.
இதில் பாலிவுட்டின் இளம் நடிகர்களில் ஒருவரான டைகர் ஷ்ராஃப் கலந்து கொண்டிருக்கிறார். டைகரின் உருவத்தை வைத்து சமூக வலைதளவாசிகள் கேலி செய்வது, மேலும் அவர் எப்படி நடிகர் ஜாக்கி ஷ்ராஃபின் மகனாக இருக்க முடியும் என்று கேட்டது குறித்து கேள்வி எழுப்பினார் அர்பாஸ் கான்.
நல்லதோ, கெட்டதோ எதை வேண்டுமானாலும் பேசும் அதிகாரம் இருக்கிறது என்பதே சில சமயங்களில் பயமாக இருக்கிறது என டைகர் ஷ்ராஃப் தெரிவித்தார். நீங்கள் வெர்ஜினா என சமூக வலைதளவாசி ஒருவர் கேட்டதை டைகரிடம் கூறினார் அர்பாஸ். அதற்கு சல்மான் கான் ஸ்டைலில் பதில் அளித்திருக்கிறார் டைகர் ஷ்ராஃப்.
நான் சல்மான் கானை போன்றே வெர்ஜின் தான் என டைகர் பதில் அளிக்க அதை கேட்டு அர்பாஸ் சிரித்தார். முன்னதாக கரண் ஜோஹர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சல்மான் கான் தான் ஒரு வெர்ஜின் என்று கூறினார். அதை மனதில் வைத்து தான் டைகரும் இப்படி பதில் அளித்திருக்கிறார். டைகரின் பதிலை பார்த்தவர்களோ, நம்பிட்டோம் நம்பிட்டோம் என்கிறார்கள். கெரியரை பொறுத்தவரை விகாஸ் பெஹல் இயக்கத்தில் கணபத் படத்தில் நடிக்கிறார் டைகர். மேலும் பாகி 4, ஹீரோபந்தி 2 ஆகிய படங்களிலும் நடிக்கிறார்.