25.8 C
Jaffna
February 4, 2025
Pagetamil
மருத்துவம்

கொரோனா தொற்றை விரட்ட உதவும் சமையலறை பொருள்!!

கொரோனா வைரஸின் தாக்கம் உலகத்தையே புரட்டிப் போட்டுக் கொண்டுள்ளது. பலரும் நோய்த் தொற்றிலிருந்து தங்களை காத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். அதில் ஒன்று தான் கலோஞ்ஜி என்று அழைக்கப்படும் கருஞ்சீரக விதைகளை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்து தான்.

​கலோஞ்ஜி (அ) கருஞ்சீரகத்தின் நன்மைகள்

வட ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டது தான் கருஞ்சீரகம். பல நூற்றாண்டுகளாக வீக்கம் மற்றும் நோய்த் தொற்றுகளை தீர்க்க பாரம்பரிய தீர்வாகப் பயன்படுத்தப்படுகிறது. சிட்னியில் உள்ள தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு குழு, கருஞ்சீரகத்தில் உள்ள மூலப்பொருள் கோவிட் -2 மற்றும் கோவிட் -19 சிகிச்சைக்கு உதவும் என்று கண்டறிந்துள்ளது. மேலும், கொரோனா வைரஸால் நுரையீரலில் தொற்று ஏற்படுவதையும் கருஞ்சீரகம் தடுக்கிறது என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

​கொரோனா சிகிச்சையில் உதவும் கருஞ்சீரகம்

கருஞ்சீரகத்தில் உள்ள மூலப் பொருளான தைமோகுவினோன், கோவிட் -19 வைரஸ் நுரையீரலில் நுழைந்து ஏற்படுத்தும் தொற்றை தடுக்கிறது என்பதற்கான பல்வேறு ஆதாரங்கள் உள்ளதாக முன்னணி எழுத்தாளரும், சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான கனீஸ் பாத்திமா கூறியுள்ளார். அதேபோல், கொரோனா வந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தீவிர நோயாளிகளை பாதிக்கும் சைட்டோகைன் புயலை இது தடுக்கும் என்று கூறியுள்ளார். இதுகுறித்த ஆய்வு, பரிசோதனை மருந்தியல் மற்றும் உடலியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

​கருஞ்சீரகத்த்தின் மற்ற பயன்கள்

அதேபோல் கருஞ்சீரகம் உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் மேம்படுத்துகிறது. மேலும், ஆஸ்துமா, தோலழற்சி, முடக்கு வாதம் மற்றும் கீல்வாதம் உள்ளிட்ட நிலைகளுக்கும், மல்டிபிள் ஸ்களீரோசிஸ் போன்ற ஒவ்வாமை நிலைகளுக்கும் சிகிச்சை அளிக்க கருஞ்சீரகம் உதவுகிறது. அதுமட்டுமின்றி, உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கவும் இந்த கருஞ்சீரகம் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஸ்டேபிளோகோகஸ் ஆரியஸ் போன்ற பாக்டீரியா மற்றும் இன்ப்ளூயன்ஸா உள்ளிட்ட வைரஸ்களைக் கொல்வதில் இது பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது, அவை சருமத்தில் நுழைந்தால் லேசானது முதல் கடுமையான தொற்றுகள் வரை ஏற்படக் கூடும்

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

Pagetamil

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

Leave a Comment