திருகோணமலையில் கடலலையில் சிக்கி ஒருவரை காணவில்லை

Date:

திருகோணமலை முகாமடியில் கடலலைக்குள் சிக்குண்டு ஒருவர் காணாமல் போயுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

திருகோணமலை முகாமடியில் மீன்பிடிக்கச் சென்ற முருகையா தட்சிணாமூர்த்தி (52) என்பவர் கடலலைக்குள் சிக்குண்டு காணாமல் போயுள்ளார்.

இன்று (03), குறித்த கடலில் படகை தள்ளிச் செல்லும் போது கடலலைக் கடுமையாக இருந்ததால், அவர் அதில் சிக்குண்டு மாயமானார் என தெரிவிக்கப்படுகிறது.

கடல் அலையில் சிக்கி ஒரு மணி நேரம் கடந்தும் அவரை காண முடியாத நிலையில், அவர் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த பகுதி மீனவர்களும், கடற் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இணைந்து தேடுதல் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கஸ்ஸப தேரர் குழுவிற்கு மனநல, போதைப்பொருள் சோதனை

அநுராதபுரம் ருவான்வெலிசாய அருகே நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில்...

இளம்பெண் படுகொலை: காதலன் கைது!

நுவரெலியாவில் உள்ள தங்குமிடம் ஒன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்...

மரணப்படுக்கையிலிருக்கும் சிவாஜியை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்கிறது ரிஐடி!

யாழ்ப்பாணம் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்