இது முதலே தெரிஞ்சிருந்தா ஸ்ரீதேவி நிம்மதியா இறந்திருப்பாரே: ரசிகர்கள் உருக்கம்.

Date:

ஏற்கனவே திருமணமாகி அர்ஜுன், அன்ஷுலா என்கிற குழந்தைகளுக்கு தந்தையான தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீதேவி. தன் அம்மாவின் வாழ்க்கையை கெடுத்தவர் என்று ஸ்ரீதேவி மீது கோபத்தில் இருந்தார் நடிகர் அர்ஜுன் கபூர்.

அர்ஜுனின் கோபத்தை நினைத்து எப்பொழுதுமே பயத்தில் இருந்தார் ஸ்ரீதேவி என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். ஆனால் ஸ்ரீதேவி இறந்த பிறகு அர்ஜுன் ஆளே மாறிவிட்டார். ஸ்ரீதேவியின் மகள்களான ஜான்வி மற்றும் குஷியை தன் சொந்த தங்கைகள் போன்று பார்த்துக் கொள்கிறார்.

இந்நிலையில் அர்ஜுனும், ஜான்வியும் சேர்ந்து முதல்முறையாக ஒரு பத்திரிகையின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர். மேலும் அண்ணன், தங்கை உறவு குறித்தும் பேட்டி அளித்திருக்கிறார்கள்.
அந்த பேட்டியில் அர்ஜுன் கூறியதாவது, முன்பெல்லாம் நானும், ஜான்வியும் பேசிக்கொள்ள மாட்டோம். சந்திப்போம் ஆனால் சொல்லிக்கொள்ளும்படி பேச மாட்டோம் என்றார்.
அதை கேட்ட ஜான்வியோ, என் குடும்பத்தாரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். எங்கள் இருவருக்கும் ஒரே தந்தை, எங்களுக்கு ஒரே ரத்தம். நான் தினமும் அர்ஜுன் அண்ணா வீட்டிற்கு செல்ல மாட்டேன். ஆனால் அவருடன் இருக்கும்போது பாதுகாப்பாக உணர்கிறேன். என்ன நடந்தாலும் அண்ணனும், அக்கா அன்ஷுலாவும் என் பக்கம் இருப்பார்கள் என்பது எனக்கு தெரியும். இதை நான் தைரியமாக சொல்வேன் என்றார்.
ஜான்வியின் பேட்டியை பார்த்தவர்களோ, அர்ஜுன் இந்த அளவுக்கு பாசமாக இருப்பார் என்பது முன்பே தெரிந்திருந்தால் ஸ்ரீதேவி நிம்மதியாக இருந்திருப்பார் என்று தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...

நாமலின் ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! சாட்சியமளிக்க இலங்கை வரும் பிரான்ஸ் புலனாய்வாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்