27.6 C
Jaffna
March 28, 2024
சினிமா

நவரசா -விற்கு எழுந்தது கடும் எதிர்ப்பு! என்ன காரணம்?

பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் நவரசா எனப்படும் தமிழ் வெப் சிரீஸ் வெளியாகியுள்ளது. இதில் நடிகர் சூர்யா, சித்தார்த், ரேவதி என தமிழில் மிகப்பெரிய நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இந்த வெப்சீரீஸிற்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் சார்பில் இன்று பிரபலமான தமிழ் நாளிதழான தினத்தந்தி நாளிதழுக்கு முதல் பக்க முழு பக்க விளம்பரம் ஒன்றை கொடுத்திருந்தது.

அந்த விளம்பரம் அந்த வெப்சீரில் வரும் 9 கதைகளில் ஒரு கதையின் தீம் என்கிற ரீதியில் நடிகர் சித்தார்த் நடிகையின் புகைப்படத்துடன் ஒரு விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது. வெளியான அந்த விளம்பரம் தற்போது பெரும் சர்ச்சைய கிளப்பியுள்ளது. அந்த விளம்பரத்தில் சித்தார்த்த புகைப்படத்திற்கு பின்பு பேக்கிரவுண்டில் இருப்பது குரான் வசனம் என்றும், பொதுபோக்கு விளம்பரங்களில் குரானை பயன்படுத்த கூடாது என்றும், அதே நேரத்தில் அந்த கதைக்கான பெயரான இன்மை என்ற சொல்லை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள் அதன் எழுத்துரு அரபிக் எழுத்துரு போல இருப்பதாக இவை இரண்டையும் எதிர்த்து #BanNetflix, #BanDailyThanthiNews, #TahaffuzeQuran ஆகிய ஹேஷ் டேக்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஏற்கனேவ நடிகர் கமல் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் திரைப்படத்தின் போது அந்த திரைப்படத்தின் பெயரின் எழுத்துருவிற்கும் இதே போல அரபிய எழுத்துருவாக இருப்பதாக பிரச்சனை எழுந்தது. தற்போது இந்த திரைப்படத்திற்கும் எழுந்துள்ளது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ முதல் சிங்கிள்

Pagetamil

வெளிநாட்டுக்காரரை இரகசியமாக திருமணம் செய்து கொண்ட நடிகை டாப்ஸி

Pagetamil

“இது தேர்தல் நேரம்… மூச்சுவிடக் கூட பயமாக உள்ளது!” – ரஜினிகாந்த்

Pagetamil

மிரட்டும் பிரமாண்டத்துடன் சூர்யாவின் ‘கங்குவா’ டீசர்

Pagetamil

புதிய படத்தில் விஜய் சம்பளம் ரூ.250 கோடி?

Pagetamil

Leave a Comment