சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் நமக்கு ஏராளமான சரும பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே இதைத் தடுக்க சன்ஸ்க்ரீன் லோசன்கள் உதவுகிறது. இந்த சன்ஸ்க்ரீன் லோசனை எப்படி தேர்ந்தெடுக்கலாம் இது எப்படி நமக்கு பாதுகாப்பு அளிக்கிறது என அறிந்து கொள்வோம்.
சன்ஸ்க்ரீனின் முக்கியத்துவம்
நாம் ஒவ்வொரு முறை வெளியே செல்லும் போதும் நம்முடைய சருமமானது சூரிய ஒளிக்கதிர்களால் பாதிப்படைகிறது. அதிகமாக சூரியனின் புற ஊதாக் கதிர்கள் நம் சருமத்தில் படும் போது சரும புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சூரியனின் ஒளிக்கதிர்களிடம் இருந்து நம் சருமத்தை பாதுகாப்பது மிகவும் அவசியம். நம்மில் பெரும்பாலனோர் சூரியனிடம் இருந்து நம் சருமத்தை பாதுகாக்க சன்ஸ்க்ரீன் லோசனை பயன்படுத்தி வருகிறோம். சன்ஸ்க்ரீனில் ஏராளமான SPF காரணி கொண்டவைகள் காணப்படுகிறது. இதில் SPF என்பது சூரியனிடம் இருந்து பாதுகாக்கும் காரணி ஆகும். நாம் பயன்படுத்தும் சன்ஸ்க்ரீன் குறைந்தது SPF 30 ஆக இருக்க வேண்டும். உதாரணமாக SPF 50 சன்ஸ்க்ரீனை பயன்படுத்தினால் உங்க சாதாரண சருமத்தை விட 50 மடங்கு பாதுகாப்பை சூரியக் கதிர்களிடம் இருந்து இது வழங்கும். சரி வாங்க இந்த SPF யை எப்படி சரியாக தேர்ந்தெடுப்பது என அறிந்து கொள்வோம்.
மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் :
சன்ஸ்க்ரீனில் உள்ள SPF காரணி சூரிய ஒளியில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது. எனவே வெளியே செல்லும் சன்ஸ்க்ரீனை கட்டாயமாக பயன்படுத்துவது அவசியம். நீங்கள் சன்ஸ்க்ரீன் போடாமல் வெளியே செல்லும் போது ஏற்படும் பாதிப்பு அதிகம். இதுவே நீங்கள் SPF 10 சன்ஸ்க்ரீனை பயன்படுத்திக் கொண்டால் 10 மடங்கு அதாவது 3 மணி நேரம் 30 நிமிடங்கள் வரை உங்க சருமம் எரியாமல் பாதுகாக்க முடியுமாம்.
சன்ஸ்க்ரீனை தேர்ந்தெடுங்கள் :
நீங்கள் சன்ஸ்க்ரீனை தேர்ந்தெடுக்கும் போது குறைந்தது SPF 30 உள்ள சன்ஸ்க்ரீனை தேர்ந்தெடுங்கள். இது 97% சூரியக் ஒளிக்கதிர்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. இது சாதாரண சருமத்தை விட 30 மடங்கு பாதுகாப்பு அளிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
வெளியே செல்லக் கூடாத நேரம் :
நாம் என்ன தான் சன்ஸ்க்ரீனை பயன்படுத்தினாலும் மதியம் 12-4 மணியளவில் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. ஏனெனில் மதிய வேளையில் சூரிய ஒளிக்கதிர்கள் தாக்கம் தீவிரமாக இருக்கும். அதே மாதிரி சன்ஸ்க்ரீன் தண்ணீர் மற்றும் வியர்வை வராமல் தடுக்கவும் உதவுகிறது. மேலும் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை சன்ஸ்க்ரீனை மறுபடியும் அப்ளே செய்ய வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.
தினசரி செயல்பாடு அதிகமாக இருப்பவர்கள் :
நீங்கள் வேலை காரணமாக அடிக்கடி வெளியே செல்ல நேர்ந்தால் அவர்கள் SPF – 15 (93 %சன்ஸ்க்ரீன் பாதுகாப்பு மற்றும் SPF 50 (98 % சன்ஸ்க்ரீன் பாதுகாப்பை) பெறலாம். எனவே இனி வெளியே செல்லும் போது இந்த டிப்ஸ்களை பின்பற்றுவது உங்க சருமத்திற்கு உதவியாக இருக்கும்.