‘போதைப்பொருள் வாங்குவதற்காக திருடினோம்’: யாழில் சிக்கிய இரண்டு வழிப்பறி திருடர்கள்!

Date:

யாழில் வழிப்பறியில் ஈடுபட்ட  இருவர்  யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் செய்யப்பட்டுள்ளார்கள்.

கடந்த 3 மாத காலமாக யாழ்ப்பாணத்தில் வீதியில் பயணிப்போரிடம் வழிப்பறியில் இவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

நேற்றைய தினம் கோப்பாய் பிரதேசத்தில் கோப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரின் தொலைபேசி,50 ஆயிரம் ரூபா பணம், கைப்பை மேலும் பல ஆவணங்களை திருடி  சென்றமை, யாழில் பத்திரிகை நிறுவனத்தில்  கடமையாற்றும் ஒருவரின் கைத்தொலைபேசியினை  திருடிச் சென்றமை, சுன்னாகம் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் கைப்பை,  இரண்டு தொலைபேசிகள்,  முப்பதாயிரம் ரூபா பணம்  கொள்ளையடித்தது, மானிப்பாயில் ஒருவரின்  கைப்பை திருடிய திருட்டுச் சம்பவத்துடன்  தொடர்புடைய சந்தேக நபர்களே கைதாகியுள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது  கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் கைப்பை மற்றும் ஏனைய ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அவர்கள் போதைப்பொருள் பாவனையாளர்கள். போதைப்பொருள் பாவனைக்கு பணம் தேவைப்பட்டதால் திருடியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யபட்டு இருவரும் சாவகச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள்.

spot_imgspot_img

More like this
Related

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...

ஈரான் குற்றச்சாட்டை அமெரிக்கா மறுப்பு

அமெரிக்க தாக்குதலில் பொதுமக்கள் உள்கட்டமைப்பு சேதமடைந்ததாக ஈரான் குற்றச்சாட்டு; அமெரிக்கா மறுப்பு போர்நிறுத்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்