இரண்டு மணித்தியாலயங்களுக்கு பிறகு நுவரெலியா – அட்டன் பிரதான வீதி வழமைக்கு திரும்பியது

Date:

அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகாமையில் விழுந்த பாரிய மரம் அகற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று மதியம் 3 மணி முதல் அவ்வீதி ஊடான போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியது.

அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகாமையில் மதியம் 1 மணியளவில் பாரிய மரம் ஒன்று உடைந்து விழுந்ததால் அவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாக முடங்கியது.

இதனால் மரத்தை அகற்றி இயல்புநிலை திரும்பும் வரை அட்டனிலிருந்து நுவரெலியா செல்லும் அதேபோல நுவரெலியாவிலிருந்து அட்டன் வரும் பயணிகள் மாற்று வழியை பயன்படுத்தினர்.

இந்நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும், கொட்டகலை பிரதேச சபையினரும், தோட்ட பொது மக்கள் மற்றும் பத்தனை பொலிஸாரும் இணைந்து மரத்தை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனையடுத்து, 3 மணியளவில் மரம் வெட்டப்பட்டு அகற்றப்பட்டது.

எனினும், சீரற்றகாலநிலை தொடர்ந்தால் மரம் முறிந்து விழும் அபாயமிருப்பதால் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

க.கிஷாந்தன்-

spot_imgspot_img

More like this
Related

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்