ஓகஸ்ட் 1ஆம் திகதி நுவரெலியாவில் மாபெரும் போராட்டம்!

Date:

ஆசிரியர் விடுதலை முன்னணி ஏனைய ஆசிரியர் தொழிற்ச்சங்கங்களுடன் இணைந்து ஆகஸ்ட் முதலாம் திகதி காலை 10 மணிக்கு நுவரெலியா மாநகரில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தவுள்ளதாக ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் என்.டி.எஸ்.நாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

நாடளாவிய ரீதியில் அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசார் ஊழியர்களும் கல்விசாரா ஊழியர்களும் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத் தருமாறு கடந்த 24 வருடங்களாக கோரி வருகின்றனர்.

அந்த வகையில் சகல அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் என பலரும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்தவுள்ளனர்.

ஓகஸ்ட் முதலாம் திகதி காலை 10 மணிக்கு நுவரெலியா மாநகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்துவதற்கு சகல அதிபர் மற்றும் ஆசிரிய தொழிற்ச்சங்கள் தீர்மானித்துள்ளன.

அதற்கிணங்க ஓகஸ்ட் முதலாம் திகதி காலை 9.30 மணியளவில் நுவரெலியா காமினி மத்திய கல்லூரிக்கு அருகாமையில் அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகளையும் அணிதிரளுமாறு ஆசிரியர் விடுதலை முன்னணி அழைப்பு விடுக்கின்றது என்றார்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க தடையை தவிர்க்க ‘கள்ளக்காதல்’ உத்தியை பயன்படுத்தியதா சீனா?

ஒரு சீனப் பெண் தொழிலதிபருடன் கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கியுள்ள என்விடியா தலைமைச்...

என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹுவாங் கள்ளக்காதல் விவகாரம்: சிங்கப்பூர் நிறுவனத்தின் விளக்கம்!

என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹுவாங் குறித்த சர்ச்சை தீவிரமடைந்து வரும் நிலையில்,...

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் மனைவி காலமானார்

முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்ஷவின் மனைவி சந்திர மாலினி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்