45 போத்தல் கசிப்புடன் இருவர் மாவட்ட பொலிஸ் விசேடமது ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட பொலிஸ் விசேடமது ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கசிப்பு மீட்கப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மது உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்காக எடுத்து செல்லப்பட்ட நிலையில் பொலிசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது ஒருவரிடம் 25 போத்தல் கசப்பும், மற்றைய நபரிடம் 20 போத்தல் கசிப்பும் இருந்ததாகவும் இருவரையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் குறிப்பிடுகின்றனர்.



