கார் விபத்து: மருத்துவமனையில் இருக்கும் யாஷிகா மீது போலீஸ் அதிரடி நடவடிக்கை!

Date:

காரை வேகமாக ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்தை பார்க்க அமெரிக்காவில் வேலை செய்த அவரின் தோழி பவானி சென்னைக்கு வந்திருக்கிறார். அவரையும், நண்பர்கள் செய்யது, அமீர் ஆகியோரையும் அழைத்துக் கொண்டு காரில் புதுச்சேரிக்கு சென்றார் யாஷிகா.

புதுச்சேரியில் பார்ட்டியில் கலந்து கொண்டுவிட்டு சனிக்கிழமை இரவு சென்னை திரும்பினார்கள். காரை யாஷிகா ஓட்டி வந்திருக்கிறார். கிழக்கு கடற்கரை சாலை சுளேரிக்காடு என்கிற பகுதியில் வந்தபோது கார் நிலைதடுமாறி தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா படுகாயம் அடைந்தார். அடையாறில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள யாஷிகாவுக்கு கால், இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் காரை நான் தான் ஓட்டி வந்தேன் என்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் யாஷிகா. காரை அதிவேகமாக ஓட்டி வந்த யாஷிகா மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் யாஷிகாவின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

மருத்துவமனையில் இருக்கும் யாஷிகாவுக்கு தன் தோழி பவானி இறந்தது தெரியாது. அதிர்ச்சி அளிக்கும் எந்த தகவலையும் யாஷிகாவிடம் சொல்லக் கூடாது என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்களாம்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்