சீனாவை சேர்ந்த ரிக்ரொக் பிரபலமான சியாவோ க்யூமீ சமூக வலைதளத்தில் வெளியிட 160 அடி உயரமான கிரேனில் இருந்து லைவ் வீடியோ எடுத்தபோது கால் தவறி விழுந்து உயிரிழந்தார்.
சீனாவை சேர்ந்தவர் சியாவோ க்யூமீ. 23 வயதாகும் சியாவோ கிரேன் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். அவர் வேலை பார்க்கும் இடத்தில் இருந்து அனைவரும் வீட்டிற்கு சென்ற பிறகு சமூக வலைதளத்தில் வெளியிட லைவ் வீடியோ எடுத்திருக்கிறார் சியாவோ.
அப்பொழுது கால் தவறி 160 அடி கிரேனில் இருந்து கீழே விழுந்தார். அந்த இடத்திலேயே சியோவா உயிரிழந்தார். அவர் கீழே விழுந்தபோது அவர் கையில் செல்போன் இருந்திருக்கிறது. லைவ் வீடியோ என்பதால் அவர் விழுந்தபோது பிளராகியிருக்கிறது.
சியாவோ கடைசியாக எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
சியாவோ உயிரிழந்ததை அவரின் குடும்பத்தார் உறுதி செய்துள்ளனர். ரிக்ரொக்க்கில் சியாவோவை 1 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்கிறார்கள்.
அவரின் டான்ஸ் வீடியோக்கள் சீன ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். இரண்டு குழந்தைகளுக்கு தாயான சியாவோ இறந்தது குறித்து அறிந்த அவரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.