வடக்கிற்குள் நுழைந்தவர்கள் நள்ளிரவில் வழிமறிக்கப்பட்டு பரிசோதனை!

Date:

தென்பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்தவர்களை ஏ9 பிரதான நுழைவாயிலில் பொலிசாருடன் இணைந்து வழிமறித்த சுகாதாரப் பிரிவினர் அவர்களிடம் பிசீஆர் பரிசோதனை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார பிரிவினர் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக தென்பகுதியில் இரவு வேளைகளில் வவுனியாவிற்கு வருபர்களை வவுனியா ஏ9 வீதி நுழைவாயிலான மூன்றுமுறிப்பு பகுதியில் வழிமறித்த சுகாதாரப் பிரிவினர் நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 5.30 வரை பிசீஆர் பரிசோதனை முன்னெடுத்திருந்தனர்.

டெல்டா வைரஸ் தாக்கம் நாடளாவீய ரீதியில் அதிகரித்து வருவதையடுத்து, அதனை வவுனியா மாவட்டத்தில் கட்டுப்படுத்துவதற்காக வியாபார நோக்கம், அலுலக தேவை போன்றவற்றிகாக வவுனியா மாவட்டத்தினுள் நுழையும் வாகனங்களில் பயணிப்போர் மற்றும் வவுனியா ஊடாக ஏனைய மாகாணங்களுக்கு செல்பவர்கள் என 300 க்கு மேற்பட்டவர்களுக்கு இவ்வாறு பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அவர்களின் பிசீஆர் முடிவுகளையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும்

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட...

மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினரின் பெயரை போலியாக பயன்படுத்தி கடைகளில் நூதனமாக பண மோசடி ஈடுபட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள யூஸ் விற்பனை நிலையங்கள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்