மே.இ.தீவுகள் அணிக்குள் புகுந்த கொரோனா: ஆஸி.யுடன் 2வது ஒருநாள் போட்டி ரொஸ் போட்டபின் திடீர் நிறுத்தம்

Date:

மேற்கிந்தியத்தீவுகள் அணியில் உள்ள வீரர்கள் அல்லாத ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததையடுத்து, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி தொடங்க இருந்த சில நிமிடங்களுக்கு முன் திடீரென நிறுத்தப்பட்டது.

இதனால், இரு அணி வீரர்களும் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட உள்ளது. இதனால், அடுத்துவரும் ஒருநாள் போட்டிகள் நடக்குமா அல்லது தள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அவுஸ்திரேலிய அணியில் 2வது ஒருநாள் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் ரிலே மெரிடித் அறிமுகமாக இருந்தார். ஆனால், கொரோனா தொற்று இருப்பதையடுத்து, இரு அணிகளின் வீரர்கள், போட்டி அதிகாரிகள், டிவி வர்ணனையாளர்கள், கமராமேன்கள் என அனைவரும் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இது குறித்து மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் “மே.இ.தீவுகள் அணியில் வீரர்கள் அல்லாத ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மே.இ.தீவுகள், அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அது பின்னர் நடத்தப்படும். கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் ரொஸ் போட்டபின் போட்டி நடக்க இருந்த சில நிமிடங்களுக்கு முன் கொரோனா பரிசோதனை முடிவுகள் தெரியவந்ததையடுத்து, துரதிர்ஷ்டமாக போட்டி நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆதலால் இரு அணிகளைச் சேர்ந்த வீரர்கள், வீரர்கள் அல்லாத ஊழியர்கள், போட்டி நிர்வாகிகள், வர்ணனையாளர்கள், டிவி கமராமேன்கள் என அனைவரும் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டு முடிவுகள் வந்தபின் போட்டி நடத்தும் நாள் அறிவிக்கப்படும்.

அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் வரும் பட்சத்தில் 2வது ஒருநாள் போட்டி நடத்தும் திகதி அறிவிக்கப்படும். பரிசோதனை முடிவுகள் வெள்ளிக்கிழமை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

2வது ஒருநாள் ஆட்டம் மீண்டும் நடப்பது சந்தேகத்துக்குரியதுதான். ஆனால், இரு அணி வீரர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என்று முடிவுகள் வந்தால், சனி்க்கிழமை 3வது ஒருநாள் ஆட்டம் நடக்கும். ஆனால், கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால், அவுஸ்திரேலிய அணி வங்கதேசத்துக்கு பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தவர் விரும்பும் வரை அமெரிக்காவில் தங்கலாம்: ட்ரம்ப்

கடந்த வாரம் பிரேசிலின் ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி தற்போதைய ஜனாதிபதி லூயிஸ்...

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 இளைஞர்கள் பலி

யாழ்ப்பாணம், அளவெட்டியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். ஒருவர்...

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்

யாழ்ப்பாணத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இளைஞன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்