டெவோன் நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே விழுந்து காணாமல் போன யுவதியை தேடும் பணியில் இராணுவத்தினர்

Date:

291 அடி உயரமுள்ள டெவோன் நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே விழுந்து காணாமல் போன யுவதியை தேடுவதற்காக இராணுவம் இன்று (23) சிறப்பு நடவடிக்கை மேற்கொண்ட போதிலும், யுவதி குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக நான்கு நாட்கள் தேடிய பின்னர், சுமார் 200 பேர் அடங்கிய இராணுவ குழு நீர்வீழ்ச்சியின் மேல் மற்றும் கீழ் பகுதிகளைத் இன்றைய தினம் தேடியது.

நீர்வீழ்ச்சியின் மேல் பகுதியை குறுகிய தூரத்திற்கும், நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதியையும் கீழ் பகுதியிலிருந்து மேலே தேடுவதற்கு இராணுவத்தினர் கயிறுகளைப் பயன்படுத்தினர். ஆனால் காணாமல் போன யுவதியின் எந்த தடயமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தேடல் குழு தெரிவித்தது.

கடந்த 18ஆம் திகதி பிற்பகல் நான்கு இளம் பெண்கள் டெவோன் நீர்வீழ்ச்சியைப் பார்வையிட சென்றிருந்தனர். அதுமட்டுமல்லாமல் நீர்வீழ்ச்சியின் மேல் பகுதியில் இருந்து செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டமையும் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே விழுந்து காணாமல் போனவர் லிந்துலை லென்தோமஸ் தோட்டத்தில் வசிக்கும் எம்.பவித்ரா (வயது – 19) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

–க.கிஷாந்தன்-

spot_imgspot_img

More like this
Related

திலீபன் நினைவாலயத்தை இடித்தகற்றுமாறு யாழ் மாநகரசபைக்கு யாழ் பிரதிப்பொலிஸ்மா அதிபர் கடிதம்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவாலயத்தின் அனுமதியின்றிய தற்காலிக...

காட்டு யானையைக் கொல்ல பொறி துப்பாக்கி! சிக்கிய நபருக்கு ரூ.3.1 இலட்சம் அபராதம்!

காட்டு யானையைத் தாக்கும் நோக்கில் பொறி துப்பாக்கி அமைத்ததுடன், அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கி...

சூர்ப்பணகையாக நடித்தது ஏன்? – ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்

ரன்​பீர் கபூர், சாய் பல்​லவி, யாஷ் நடிக்​கும் ‘ராமாயணா’, நவ.5-ல் வெளியாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்