கொக்குவிலில் நேற்று தாக்குதல் நடத்திய 3 ரௌடிகளும் கைது!

Date:

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் உள்ள கடையொன்றின் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்திய 3 ரௌடிகளையும் யாழ்ப்பாண பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து வாளும் மீட்கப்பட்டது.

குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் உள்ள கடையொன்றின் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டது.

கடைஉரிமையாளரும் அவரது மனைவியும் மனைவியாரது தம்பியும் கடையிலிருந்து தமது கடையின் பின்புறத்தே உள்ள வீட்டிற்கு கடையில் உள்ள பொருட்களை கொண்டு சென்ற நேரம் கடை முன்பாக வந்த அடாவடி குழுவினர் பெற்றோல் போத்தலை எறிந்து தீமூட்டியதுடன் கடைஉரிமையாளரின் மனைவியின் மீது வாளால் வீச முற்பட்டுள்ளனர்.

இருப்பினும் தெய்வாதீனமாக குறித்த பெண் எதுவித காயமுமின்றி தப்பித்துள்ளார். அலறல் சத்தத்தையறிந்து கடையின் பின்புறம் நின்றவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முற்பட்டபோது தீக்காயமும் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த யாழ்ப்பாண பொலிஸ் தலைமையக பொறுப்பாதிகாரி விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதையடுத்து, தாக்குதலுடன் தொடர்புடைய மூவரும் இன்று கைதாகினர். யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த 2 பேரும், வசாவிளான் பகுதியை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க தடையை தவிர்க்க ‘கள்ளக்காதல்’ உத்தியை பயன்படுத்தியதா சீனா?

ஒரு சீனப் பெண் தொழிலதிபருடன் கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கியுள்ள என்விடியா தலைமைச்...

என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹுவாங் கள்ளக்காதல் விவகாரம்: சிங்கப்பூர் நிறுவனத்தின் விளக்கம்!

என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹுவாங் குறித்த சர்ச்சை தீவிரமடைந்து வரும் நிலையில்,...

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் மனைவி காலமானார்

முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்ஷவின் மனைவி சந்திர மாலினி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்