இஷாலினிக்கு நீதி கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம்!

Date:

இசாலினியின் மரணம் தொடர்பில் உரிய விசாரணைகள்    பக்கச்சார்பின்றி இடம் பெற்ற வேண்டும் எனவும், நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஸ்பிரயோகங்களை கண்டித்தும் இன்றைய தினம் வியாழக்கிழமை (22) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.
மன்னார் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில்,மன்னார் மாவட்ட பெண்கள் விழிப்புணர்வு சங்கத்தின் பங்களிப்புடன் குறித்த போராட்டம் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மெசிடோ நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிராடோ, சட்டத்தரணி,பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் ,மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக வித்தியாவை அடுத்து இசாலினியா?,சிறுவர் பெண்கள் உரிமைகளுக்கு மதிப்பளித்து பாதுகாப்போம்,பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு விரைவாக நீதி வழங்குங்கள்,பெண்கள்,சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்தை தடுப்போம்,உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் 11 மணி வரை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
spot_imgspot_img

More like this
Related

‘உயிருடன் திரும்புவது சாத்தியமற்றது’: பாகிஸ்தான் சிறைக்கொடுமைகளை அம்பலப்படுத்திய இம்ரான் கானின் கடிதம்!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் பிடிஐ (PTI) கட்சியின் நிறுவனரும், முன்னாள் பிரதமருமான...

திருமலை நீதிமன்றத்தில் கஸ்ஸப தேரர் தெரிவித்தவை!

கடலோரப் பகுதியில் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட கட்டுமானம் தொடர்பான வழக்கொன்றில், திருகோணமலை நீதவான்...

நிதி முறைகேடு குற்றச்சாட்டில் தொழிற்சங்கவாதி ஆனந்தபாலித கைது!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் 3.11 மில்லியன் ரூபா பெறுமதியான மேலதிக நேரக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்